SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, June 07, 2012

INTELLECTUALS SHOULD ONLY BECOME TEACHERS -KAPIL SIBAL


ஆசிரியர் பணிக்கு அறிவார்ந்தவர்கள் தேவை:கபில் சிபல்



ஆசிரியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் பணியில் சிறப்பாக செயல்படுவதற்கு, அறிவுத்திறன் மிகவும் அவசியம்'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது:ஆசிரியப் பணி என்பது மிகவும் மேன்மையான பணி. இந்த பணியில் ஈடுபடுவோர், சிறப்பாகச் செயலாற்ற வேண்டுமெனில், அறிவார்ந்த திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளின் கல்வியைப் பற்றிப் பேச வேண்டிய சூழலில், ஆசிரியர்களின் கல்வித் திறன் பற்றிப் பேசுகிறோம். ஆசிரியர்களாக இருப்பவர்கள், தங்களுக்குரிய சிறப்பான கல்வித் திறனைப் பெறாத சூழல் காணப்படுகிறது. அதை மாற்றியாக வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதற்கு ஆசிரியப் பணி விவகாரத்தில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. தரமான கல்வியைக் கற்பிக்க, ஆசிரியப் பணியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கபில் சிபல் பேசினார்.ஆசிரியர் பணிக்கு அறிவார்ந்தவர்கள் தேவைப்படுகிறார்கள். இப்போதுள்ள ஆசிரியர் சமுதாயம் தேவையான அளவுக்கு கல்வியறிவு பெற்றிருக்கவில்லை என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
 தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 59-வது கூட்டத்தில் அவர் பேசினார்.
 "குழந்தைகளின் கல்வி தொடர்பாக விவாதிப்பதற்கே நீங்கள் விவாதிப்பது வழக்கம்.
 அதற்கு எதிரிடையாக ஆசிரியர்களின் கல்வி தொடர்பாக விவாதிக்க நாம் இங்கு கூடியுள்ளோம்.
 இதன்மூலம், நமது ஆசிரியர்கள் சமுதாயம் தேவைப்படும் அளவுக்கு கல்வியறிவு பெற்றிருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டுவிட்டோம்' என்றார்.
 ஆசிரியர் தொழிலை நாம் சரிவடையச் செய்துவிட்டோம். நமது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். தற்போதைய முறையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
 நமது குழந்தைகளுக்கு கல்வியளிக்க வேண்டும் என்று விரும்பினால், அறிவார்ந்தவர்களை ஆசிரியர் பணிக்கு கொண்டு வர வேண்டும்.
 கற்றலின் தரத்தை உயர்த்த கற்பித்தலின் தரத்தை உயர்த்த வேண்டும். ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வாரியத்தினர் தீவிரமாக விவாதித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார்
 

No comments: